Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பாக சுற்றறிக்கை!

Published

on

   ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பை சில நபர்கள் தவறாகப் தமது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களுடன், உத்தியோகபூர்வ வேலைகள் அல்லாத வேறு எதற்கும் அலுவலக கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தூதரகங்களில் இருந்து விசா பரிந்துரைகளைப் பெறுவதற்கும், தனியார் தொழில் நடத்துவதற்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் கடிதத் தலைப்பை அங்குள்ள சிலர் தவறாகப் பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளதாக என்கிற செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு செயலகத்தின் தலையெழுத்துக்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், வெளிநாட்டு அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அவர்களுடன் புகைப்படம் எடுப்பதைத் தடை செய்து கடந்த வாரம் மற்றுமொரு உத்தரவை பிறப்பித்துள்ளது.