முக்கிய செய்தி
யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!
யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் இன்றையதினம் மாணவி விரிவுரைக்கு செல்லாது அறையில் தனித்து இருந்ததாகவும், சக மாணவிகள் அறைக்கு வந்த வேளை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.