உள்நாட்டு செய்தி
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தெளிப்படுத்தியுள்ளது.
இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுக்கின்றது.
இதற்கமைய மத்திய வங்கி தெரிவிக்கையில், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த வங்கித் தொழில் கொடுக்கல், வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்கு காலம் பெயர் குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவு செய்யப்பட்ட நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.