உள்நாட்டு செய்தி
நடைமுறைக்கு வந்துள்ள கட்டண அதிகரிப்பு – வெளியானது வர்த்தமானி
நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.
அத்துடன், 06 முதல் 10 வரையான அலகொன்று 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பானது நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நீர்க்கட்டண அதிகரிப்பு தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.