உள்நாட்டு செய்தி
இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!
இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (01.08.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே டயானா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக அரச அமைச்சினால் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த பாரம்பரிய முறைகளை கைவிட வேண்டும் என்றும், பாரம்பரிய நகரங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காக செயல்படும் நகரங்களை உருவாக்குவது அவசியம் என்றும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.