உள்நாட்டு செய்தி
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு…!
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (1) மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய என்ற திருமணமான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்தவர் மனநோய் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார்.