உள்நாட்டு செய்தி
நாட்டில் கைதிகளின் எண்ணிக்கை 200 மடங்காக அதிகரிப்பு
நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை,வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது.
எனினும், தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 29,000-ஐ அண்மித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இது 200% அதிகரிப்பாகும்.