முக்கிய செய்தி
கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!

கொழும்பில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.