முக்கிய செய்தி
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையத்திலும் 50 வீதத்திற்கும் அதிகமான பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் 4000 பேரை தொழிலில் அமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 206 தொழிற்பயிற்சி நிலையங்களில் 107 பயிற்சி நிலையங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
பயிற்சிப் பாடநெறிகள் மாலை வேளையிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறுவதால், தொழிலுக்கு செல்வோர் கூட இதில் பங்கேற்க முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 277 888 மற்றும் 0117 270 270 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிட்டுள்ளார்.