முக்கிய செய்தி
கொழும்பில் நீர் விரயம் குறைவடைந்துள்ளது !
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விரயம் 40 வீதத்தில் இருந்து 18 வீதமாக குறைவடைந்துள்ளதுகொழும்பிற்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டமையின் ஊடாக நீர் விரயம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த திட்டத்தின் ஊடாக சேதமடைந்த நீர்க்குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் வசந்தா இலங்கசிங்க தெரிவித்தார்.