Connect with us

முக்கிய செய்தி

வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு

Published

on

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (24.07.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பிற்கு அழைப்பு | Complete Shutdown Across North And East In Sl

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும், அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *