முக்கிய செய்தி
இரு வகையான அஸ்பிரின்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து இரு வகையான அஸ்பிரின் மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் அஸ்பிரின்களின் பல மாதிரிகள் சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் பரிசோதிக்கப்பட்டது.இதன்போதே குறித்த இரண்டு வகை மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.