உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரினால் வரவேற்கப்பட்டதோடு இருவரும் நேற்று (20) மாலை கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.