உள்நாட்டு செய்தி
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு !
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட – வெலிபாரவில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.வெலிபாரவை சேர்ந்த 41 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
வெலிபாரவில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடையாளங்காணப்படாத இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.குறித்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.