முக்கிய செய்தி
தடுப்பூசி பாவனை தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
தடுப்பூசி அல்லது மருந்தை பெற்றுக்கொள்ளும்போது ஏதேனும் ஓர் ஒவ்வாமை நிலை ஏற்படுமாயின் அதற்காக அவசர சிகிச்சைகளை வழங்கும் முறைமை தொடர்பில் அரச வைத்தியசாலைகளுக்கு அறியப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, அரச வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கடந்த சில நாட்களாக நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்கியபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சில மரணங்கள் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த விசேட வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.