மொனராகலை பகுதியில் இன்று காலை சிறு அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.இன்று காலை 09.06 மணியளவில் ரிச்டர் அளவுகோளில், 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.