உள்நாட்டு செய்தி
போசாக்கு வேலைத்திட்டத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்காக ஒருவேளை உணவை வழங்கும் போசாக்கு வேலைத்திட்டத்திற்காக உணவை விநியோகிப்பவர்களுக்கான பல மாத கால கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மே மாதம் முதல் இதுவரை அந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை என போசாக்கு உணவு விநியோகஸ்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.அவர்களுக்கான கொடுப்பனவு வலய கல்வி காரியாலயங்கள் ஊடாக வழங்கப்பட வேண்டும்.”தங்களுக்கான நிதி கிடைக்கப் பெறவில்லை எனவும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் அந்த நிலுவைக் கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் வலய கல்வி காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்