Connect with us

உள்நாட்டு செய்தி

பேராதனை வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி! தடுப்பூசி குறித்து தொடரும் சிக்கல்

Published

on

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பேராதனை வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி! தடுப்பூசி குறித்து தொடரும் சிக்கல் | Girl Death In Peradana Hospital Report

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனிக்கு வழங்கப்பட்ட சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே உயிரிழந்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“செஃப்டர் எக்ஸோன் (Ceftriaxone) மருந்து பயன்பாட்டினால் மரணம் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றே மீண்டும் பதிவாகியுள்ளது.

பேராதனை வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி! தடுப்பூசி குறித்து தொடரும் சிக்கல் | Girl Death In Peradana Hospital Report

மேலும், சில மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் தற்போது காணப்படும் நிலை மிகவும் அசாதாரணமானது.

நாட்டில் பல பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகின்ற காரணத்தினால் ஒவ்வாமை என்ற விடயத்திற்கு அப்பால் சென்று இந்த மருந்தில் சிக்கல் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக சந்தேகங்களை மாத்திரம் எழுப்பாமல் உரிய மருந்துகளை உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.