Connect with us

முக்கிய செய்தி

ஜப்பானின் கப்பல் இலங்கை வருகை

Published

on

ஜப்பானின் நாசகார கப்பலான சாமிடரே, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி வரவேற்றனர்.

கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல் | Japan Shipr Arrived In Colombo

151 மீற்றர் நீளமுள்ள இந்த நாசகாரி கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர்.

மேலும், இக்கப்பல் ஜூலை 29 ஆம் திகதியன்று நாட்டில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் புறப்படும் போது கொழும்பில் இருந்து இலங்கை கடற்படைக் கப்பலுடன் புகைப்படக் காட்சியில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *