முக்கிய செய்தி
எல்ல பகுதியில் பேருந்து விபத்து ஒருவர் பலி
எல்ல பகுதியில் இன்று (18) காலை 7 மணியளவில் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.உமாஓயா வேலைத்திட்டத்தின் இரவு பணியை முடித்துக் கொண்ட ஊழியர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து எல்ல கரந்தகொல்ல ரக்கிட்டகந்த வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதில் ரந்தெனிய வெல்லவாய முகவரியைச் சேர்ந்த பஸ்நாயக்க பியசேன என்ற 73 வயதுடைய பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 10 ஊழியர்கள் இருந்ததாக உமாஓயா திட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உயிரிழந்தவரின் சடலம் வெல்லவாய மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.