முக்கிய செய்தி
கொழும்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்காக பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் சந்தேக நபர் ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.