முக்கிய செய்தி
சென்னை – யாழ் விமான சேவை : தினசரி சேவையாக மாற்றம்
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான பயணங்கள் ஜூலை 16 முதல் தினசரி சேவையாக மாற்றப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெறும் இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 67 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் விமான போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.