உள்நாட்டு செய்தி
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான புதிய முறைமை
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக, மோட்டார் போக்குவரத்து துறை உதவி கமிஷனர், தலைமை மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர், வைத்தியர்கள் ஆகியோர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி நபர், அவர் விண்ணப்பித்த வாகனத்தை ஓட்டுவதற்கு சரியான உடல் தகுதி உள்ளவரா என்பதை இந்தக் குழு முதற்கட்ட பரிசோதனையை மேற்கொள்ளும். வாகனத்தின் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள உடற்குறைபாடு தடையாக உள்ளதா என்பது குறித்து நடைமுறைச் சோதனை நடத்தப்படும்.
அவ்வாறான தடையில்லை என நிபுணர் குழு சிபாரிசு செய்தால், குறித்த நபர் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளும் சாதாரண முறையின் கீழ் எழுத்து மற்றும் நடைமுறைப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து துறை புதிய சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.