முக்கிய செய்தி
யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 3,843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சுகாதார வேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும் மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும் முல்லைத்தீவு, மாவட்டத்தில் 104 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்