முக்கிய செய்தி
பௌத்த பிக்குவை தாக்கிய மக்கள்! வெளியான காரணம்
அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் குறித்த பௌத்த பிக்குவை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.