உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் அடை மழை, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளது.
அத்துடன், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 8 மணித்தியாலங்களில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரேந்து பிரதேசங்களை அண்டிய பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.