Connect with us

உள்நாட்டு செய்தி

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

Published

on

 வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (18) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *