முக்கிய செய்தி
4 வயது சிறுமியின் சடலம் வீடொன்றிலிருந்து மீட்பு
சீதுவ – ரத்தலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 4 வயது சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும், அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணைகுறித்த இருவரின் சடலங்களும் நேற்று 26 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.