முக்கிய செய்தி
சிறுமி துஷ்பிரயோகம் – கைதான சந்தேகநபர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை !
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.48 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மனைவியின் சகோதரருடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்ட சந்தேகநபர், இன்று (24) அதிகாலை தூக்கிட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது