Connect with us

முக்கிய செய்தி

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிரான போராட்டம்

Published

on

நுவரெலியா தபால் நிலையம்  ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான  நகரின் மையத்தில் உள்ளது இது இலங்கையின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை  விற்பதற்கு எதிராக இன்று புதன்கிழமை (21) எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.நுவரெலியாவில் விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான “ஜெட்வின்” நிறுவனத்திடம் ஒப்படைக்க யோசனைகள்  முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும்  எதிர்ப்பு காட்டுவதுடன் பிரதானமாக நுவரெலியா மக்கள் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.எனினும் சுமார் ஆறு வருடங்களுக்கு முன் இவ்வாறு தெரிவித்து வந்தனர் அத்துடன் தபால் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது .மீண்டும் இவ் பழமையான கட்டிடத்தினை தன்வசமாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்னை சுற்றி கருப்பு கொடி கட்டி தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறும் , கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.இதன் போது தபால் நிலையத்திற்கு சேவைகள் பெற வந்தவர்களிடன் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்து கையெழுத்தும் சேகரிக்கப்பட்டது.இப்போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டனர் .இப்போராட்டத்திற்காக முதல் நாள் செவ்வாய்க்கிழமை நுவரெலியா பிரதான நகரில் உள்ள பொது இடங்களிலும் , வர்த்தக நிலையங்களுக்கும் துண்டுப்பிரசும் விநியோகம் செய்து , தெளிவூட்டல் வழங்கப்பட்டது .

இங்கிலாந்தின் SAINSBURY WACTHAMSTO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம்இ பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக் கொண்டே இவ்வழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலும் தேக்கு மரங்களே உபயோகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *