Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாயிகள் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

Published

on

விவசாயிகளுக்கான உரம், உர வவுச்சர் விநியோகம் தொடர்பான சிக்கல்களை முறையிடுவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறுபோக நெற்செய்கைக்கான உரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தொடர்ச்சியாக விவசாயிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைப்பதாக விவசாய அபிவிருத்தி திணைக்களமும் தேசிய உர செயலகமும் அறிவித்துள்ளன.உரத்தை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் கிடைக்காவிடின், 071 76 49 054 என்ற இலக்கத்திற்கும்,உர விநியோகம் தொடர்பான சிக்கல்களுக்கு 077 34 97 565 என்ற இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும்.இதேவேளை, விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டத்தினூடாக 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உற்பத்திகளூடாக 36 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.