உள்நாட்டு செய்தி
சீமெந்து மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு
கடந்த காலங்கங்களில் சீமெந்து விலை அதிகரித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது, இதற்கமைய ஜூன் 17 முதல் விலை உயர்வு அமுலுக்கு வருகிறது.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, ஒரு கிலோ செயற்கை வண்ணம் மற்றும் நிறமற்ற சீமெந்துக்கு விதிக்கப்பட்ட CESS வரியானது 3.00 ரூபாவிலிருந்து 5.00 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 5.00 முதல் ரூ. 8.00 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 50 கிலோவுக்கு மேல் அல்லது மொத்தமாக பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி 3.00 ரூபா முதல் 5.00.ரூபாவாக அதிகரிக்கக்ப்பட்டுள்ளது