உள்நாட்டு செய்தி
இசை நிகழ்ச்சிகளுக்கு புதிய திட்டங்கள்
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு திருத்தப்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகள் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இரவு 10 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.திருத்தப்பட்ட காலக்கெடு பின்வருமாறு:* வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் – 1.00 AM* ஞாயிறு – 12.30 AMஎவ்வாறாயினும், இடம் / இசை நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்