முக்கிய செய்தி
கோழி இறைச்சி, மீன்கள் விலை அதிகரிக்கப்படாது
கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக கோழிக்கறி, மீன், காய்கறிகள் விலை மிக அதிகமாக இருந்தது. தற்போதும் அந்த நிலை உள்ளது. இந்த நிலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தொடரலாம் என்று கூறப்படுகிறது.எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது எனவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதிகரித்துள்ள கோழி இறைச்சி விலை அடுத்த சில வாரங்களில் குறையும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.