உள்நாட்டு செய்தி
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயது மாணவன் கைது.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.கடந்த 31ஆம் திகதி இரவு 23 வயதான இளைஞன் ஒருவரை குறித்த சந்தேகநபர் துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளார்.இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதனால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.