உள்நாட்டு செய்தி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி காண்பித்து அச்சுறுத்தல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சியில் மக்கள் சந்திப்பு ஒன்றில், கலந்துகொண்டிருந்தவேளை உந்துருளியில் பிரவேசித்த இருவர், கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உடனடியாகவே அவர்கள் இருவரையும் மக்கள் பிடிக்க முயற்சித்தபோது, கைத்துப்பாக்கியுடன் பிரவேசித்த நபர் தப்பியோடிய நிலையில், மற்றைய நபர் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது