முக்கிய செய்தி
வத்தலை பகுதியில் குடும்பப் பெண் படுகொலை
வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று (26.05.2023) இளம் குடும்பப் பெண் ஒருவர் அலவாங்கால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவத்தில் மரணமடைந்த 28 வயதுடைய பெண், அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியாகப் பணிபுரிந்தவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த பெண் மூன்று வயதுடைய ஆண் குழந்தையின் தாய் ஆவார்.கொலையாளியான கணவனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த பெண்ணின் சடலம் ராகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.