Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் திறந்து வைப்பு

Published

on

அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி. ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிகளாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வி. இராதாகிருஷ்ணன் எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் மற்றும் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையக மக்கள் நலன் கருதி தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கின்ற அரசியல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் வினைதிறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த தலைமை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.