முக்கிய செய்தி
2023 வாக்காளர் கணக்கெடுப்புக்கு கிராம சேவையாளர்களை தொடர்புக் கொள்ளவும் – தேர்தல்கள் ஆணைக்குழு
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பில் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மக்களைக் கோரியுள்ளது.மே 31 ஆம் திகதிக்குள் கிராம உத்தியோகத்தர் தமது வீடுகளுக்கு வரவிலலையெனில் உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தை பார்வையிடுமாறும் மக்கள் கோரப்பட்டுள்ளனர்.