Connect with us

உள்நாட்டு செய்தி

டெல்லி ராஜபாதையில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வு

Published

on

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் ஆகிய இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

குடியரசு தின நிகழ்வின் முதல் அம்சமாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார்.

அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர்.

அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார்.

அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

அதன்பின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.