முக்கிய செய்தி
எரிபொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கடந்த 13 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவின் ஊடாக அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ஜனவரி 2022 விற்பனையுடன் ஒப்பிடுகையில் ஜனவரி 2023 இல் லங்கா ஒட்டோ டீசல் விற்பனை 50 சதவீதம், பெட்ரோல் விற்பனை 30 சதவீதம் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை 70சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விற்பனை இவ்வாறு குறைவதற்கு கியூ.ஆர் முறைமை மற்றும் விலை அதிகரிப்புகளே காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் மண்ணெண்ணெய் விலை பாரியளவில் அதிகரித்ததால், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணெயை கொள்வனவு செய்யும் அளவு குறைந்துள்ளமை இதற்கு மற்றுமொரு காரணம் என சுட்டிகாட்டியுள்ளார்.