Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம்

Published

on

வெளிவிவகார அமைச்சர்  அலிசப்ரி   2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று   இந்தியாவுக்கு பயணித்துள்ளார்

புதுடெல்லியில் நடைபெறவுள்ள G20  மாநாட்டில் பங்கேற்பதற்காக  வெளிவிவகார அமைச்சர்    இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளிவிவகார அமைச்சர்    அலிசப்ரி உள்ளிட்ட  பிரதிநிதிகள் இருவர்   ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  விமானசேவைக்கு சொந்தமான விமானமூலம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு புதுடெல்லி  நோக்கி பயணித்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை  மேலும்  பல நாடுகளைச் சேர்ந்த  வெளியுறவு  அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில்  இருதரப்பு கலந்துரையாடல்களில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய  நடைமுறைகள் தொடர்பிலும்  கவனம்    செலுத்தப்படும் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளர்

பல்வேறு நாடுகளின்  மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் பங்கேற்புடன்  G 20  மாநாடு    இன்றும் நாளையும் புது  டெல்’லியில் இடம்பெறவுள்ளது

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.