உள்நாட்டு செய்தி
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி நாளை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விடயங்கள் காரணமாக திட்டமிட்டவாறு மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்தமுடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது
இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதுடன் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இதனிடையே 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பாக, பெப்ரல் அமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது
அரசியலமைப்பின் 148வது சரத்தின் பிரகாரம் நிதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு காணப்படுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் இதில் தலையிடுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தலையிடுமாறு சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்த்த
சபாநாயகரிடம் கடிதம் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.