Connect with us

Sports

இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

Published

on

இலங்கை அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்; இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்த 74 என்ற இலகுவான இலக்கை, இங்கிலாந்து அணி போட்டியின் இறுதிநாளான இன்று 3 விக்கெட் இழப்புக்கு கடந்து வெற்றிப்பெற்றது.

ஜோனி பெர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், டென் லோரன்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.
இன்று முடிவடைந்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை தமது முதல் இனிங்சில் 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கையணியிள் துடுப்பாட்டத்தில் சந்திமால் மாத்திரம் அதிகூடிய 28 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இங்கிலாந்தின் பந்து வீச்சில் டொம் பீஸ் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கு தமது முதல் இனிங்சில் பதிலளித்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் இரட்டை சதத்துடன் 421 என்ற ஒட்ட எண்ணிக்கையை பெற்றது.

ரூட் 228 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கையணியின் பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், லசித் எபுல்தெனிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து தமது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த இலங்கை லஹிரு திரிமான்ன பெற்ற 111 ஓட்டங்களுடன், 359 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் பந்து வீச்சில் ஜெக் லீச் 5 விக்கெட்டுக்களையும், டொம் பீஸ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கு 74 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இனிங்சில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

இதற்கமைய இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப்பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.