பொழுதுபோக்கு
கற்பிட்டியில் கரை ஒதுங்கிய 14 திமிங்கிலக் குட்டிகள்!
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கல்பிட்டியில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன,
மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கூறினர்.
இதேவேளை, உயிரிழந்த டால்பின்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.