Connect with us

முக்கிய செய்தி

இலங்கை மின்சார சபையை ஹெக் செய்தவருக்கு விளக்கமறியல்

Published

on

 

இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்தை ஹெக் செய்த ஒருவர் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தன்னை ஒரு 7தொழிலதிபர் மற்றும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் என அடையாளப்படுத்தியுள்ளார். மேலும் அவர் 10-20 சதவீத தள்ளுபடிக்கு தகுதியுடையவர் என நுகர்வோரின் மின் கட்டணத்தை அவர்களின் கடன் அட்டைகள் மூலம் செலுத்த முன்வந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் சந்தேகநபர் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தப்பட்டது மற்றும் ரசீது தயாரிக்கப்பட்டது, ஆனால் CEB உண்மையில் செலுத்தப்படவில்லை.
25 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கடவத்தையில் சிறிது காலம் தங்கியுள்ளார். சிஐடியின் கூற்றுப்படி,குறித்த நபர் க.பொ.த (உ/த) வரை கல்வி பயின்றுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *