Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ்.போராட்த்திற்கு தமிழக முதல்வர் கண்டனம், கைதான மாணவர்கள் விடுதலை

Published

on

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது,

“இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதவேளை, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைதான இரண்டு மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு மாணவர்களும் 50 ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டம் இன்று பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.