Politics
இலங்கையில் பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்கள் தேவை
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல சீர்திருத்தங்களை இலங்கையில் மேம்படுத்த வேண்டும் என்று சமந்தா பவர்(1ஆம் திகதி )இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தி தொடர்பாளர் ஜெசிக்கா ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீளாட்சி மற்றும் வளர்ச்சிக்கு USAID எவ்வாறு சாத்தியமான முன்னோக்கி செல்லும் பாதையை ஆதரிக்க முடியும் என்று இருவரும் கலந்துரையாடி உள்ளனர் .
கடந்து செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சமந்தா பவர் இலங்கையில்மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய உட்பட இலங்கையின் சிக்கலான நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுவதற்கு அமெரிக்காவில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சமாதானம் மற்றும் செழிப்பை பாதுகாக்க உதவுவதாக இலங்கை உடனான தனது நீண்ட கால கூட்டாண்மையே மேலும் வளர்ப்பதற்கு USAIDஉறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.