Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (05) முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்று முதல் 07 ஆம் திகதி வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது.

ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.