Connect with us

உள்நாட்டு செய்தி

டிசம்பர் மாதம் வரை மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது

Published

on

நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு நிலக்கரி கிடைத்தால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டு தேவைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை. மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.